டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 22-வது லீக் போட்டியில் கனடா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கனடா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி 17 புள்ளி 3 ஓவரில் இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.