மதுரை மாவட்டம் தல்லாகுளம் அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 30ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தல்லாக்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது செல்வக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அந்த செல்வக்குமார் தனது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்தாக சிறுமியின் தாயர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் செல்வக்குமாருக்கு 30ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 30ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 6 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.
















