நாகை மாவட்டம், வெளிப்பாளையத்தில் சண்டையை தடுக்க முயன்ற நபர் கொலை செய்யப்பட்டார்.
வெளிப்பாளையத்தில் அண்மையில் நடந்த நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோவை அதே பகுதியை சேர்ந்த மோகன்ராம், வெளிநாட்டில் இருந்து திரும்பிய தமது நண்பர் உதயக்குமாரிடம் காட்டியுள்ளார்.
அப்போது அங்கு வந்த சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க முயன்ற உதயக்குமாரின் தந்தை பக்கிரிசாமி கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் அவர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரை கைது செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
















