திருச்சி சுற்றுவட்டாரத்தில் திருடு போன 98 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருச்சி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மாநகர காவல் துறைக்கு சொந்தமான சமுதாய கூடத்தில், திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான காணாமல் போன 98 செல்போன்கள், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அப்போது மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.