ஈரோட்டில் அரசுப் பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சூரம்பட்டி வலசு நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பின்னர் தீயணைப்பு நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு கிளம்பியபோது, சில அடி தூரத்திலேயே பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றது.
இதனையடுத்து போக்குவரத்துதுறை சார்பில் மெக்கானிக் வரவழைக்கப்பட்டும், பழுதான பேருந்தை சரி செய்ய முடியாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகினர்.