திருச்சி லால்குடியில் உள்ள கோயிலில் குத்து விளக்கு திருடிய இளைஞரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
எம்.கண்ணனூர் கிராமத்தில் அமைந்துள்ள பூங்குறிச்சி அய்யனார் கோயிலில் 4 குத்து விளக்குகள், 2 தூவக்கால் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது.
இதுகுறித்து கோயில் அர்ச்சகர் பழனிச்சாமி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அப்போது சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் திருட்டில் ஈடுபட்ட குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திதாசன் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.