திருவள்ளூர் அருகே வீட்டு மனைக்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
வெள்ளவேடு பகுதியை சேர்ந்த சுனில்குமார் தான் புதிதாக வாங்கிய வீட்டு மனைக்கு தடையில்லா சான்றுபெற பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது அவரிடம், வட்டார வளர்ச்சி அலுவலரின் உதவியாளரான விஜயகுமார் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து சுனில்குமார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாரளித்த நிலையில், விஜயகுமாரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன்பேரில் சுனில்குமாரிடம் இருந்து விஜயகுமார் பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.