கடலூரில் வழிபறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடிக்கச் சென்றபோது தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
கடலூரின் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் செமண்டலம் குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர்.
அப்போது சதீஷ், ஜீவா, ஏழுமலை ஆகிய 3 பேர் தப்பிக்கும் முயற்சியாக மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
இதில் 3 பேருக்கும் கால் முறிவு ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.