கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வேகத்தடை அமைக்கக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புளியம்பட்டியில் உள்ள பொள்ளாச்சி – பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் வேகத்தடை அமைக்குமாறு பல முறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் வேகத்தடை அமைக்காததைக் கண்டித்து, அந்த நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.