சென்னையில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பேரணியாக சென்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவான்மியூரைச் சேர்ந்த சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதமன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர் கௌதமன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தும் தாக்குதலை கண்டித்து, Madras High Court Advocates Association சார்பில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட, உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.
அப்போது அச்சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையிலான வழக்கறிஞர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.