நாக்பூரில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்தை அறிந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அனில் தேஷ்முக் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.