பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து இராமேஸ்வரம் தீவிற்கு செல்ல, பாம்பன் கடல் பகுதிகளில் சுமார் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் முதல் ரயில் பாலம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என்பதால் அதற்கு முன்பாகவே ரயில் பாலத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.