ஆம்பூர் அருகே ஊதியம் சரிவர வழங்காத தனியார் காலணி தொழிற்சாலையை கண்டித்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலணி தொழிற்சாலையில், கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல், தீபாவளி, போனஸ், தொழிலாளர், வைப்புநிதி, மற்றும் மாத ஊதியம் வழங்காமல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, கடந்த 2 தினங்களாக தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலை நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.