சிவகங்கை அருகே தண்ணீர் தொட்டியை பள்ளி மாணவர்கள் வைத்து சுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழு நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
குமாரபட்டி அரசு உயர்நிலை பள்ளியில் உள்ள மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை, ஆசிரியர் உத்தரவின் பேரில் மாணவர்கள் ஆபத்தான முறையில் சுத்தம் செய்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழு பள்ளியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.