சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் மிளகாய் பொடியை தூவி இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மறவமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர் முருகானந்தம் மற்றும் சூப்பர்வைசர் தினகரன் ஆகிய இருவரும் வங்கியில் பணத்தை செலுத்துவதற்காக 2 லட்சத்து 67 ரூபாயை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களை வழிமறித்த 2 பேர், தினகரன் கண்ணில் மிளகாய்பொடியை தூவிவிட்டு பணத்தை பறித்து கொண்டு தப்பியோடினர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.