அச்சத்தில் அமெரிக்கா - சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு
Sep 27, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அச்சத்தில் அமெரிக்கா – சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 8, 2026, 10:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் தனது தேசிய பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக தொடர்ந்து எச்சரித்து வரும் சீனா, ‘ஸ்டார்லிங்க் கில்லர்’ ஆயுதத்தை உருவாக்கி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகில் போர்க்களம் வேகவேகமாக மாறி வருகிறது. அணு ஆயுத போட்டியுடன் விண்வெளிப் போர் போட்டி அதிகரித்துள்ளது.

அதன் ஒருபகுதியாக சீனாவும், அமெரிக்காவும் மேம்பட்ட மைக்ரோவேவ் ஆயுதங்களை உருவாக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

விண்வெளியில் சுற்றிவரும் ஒரு செயற்கைக்கோளைத் தாக்கி அழிப்பது என்பது மிகவும் சிக்கலான செயலாகும்.

அதி-நவீன ஏவுகணைகளால் எதிரியின் செயற்கை கோள்களைத் தாக்கும் போது அதிக அளவு விண்வெளிச் சிதறல்கள் ஏற்படுவதோடு, தன் சொந்த செயற்கைக்கோள்களும் தவிர்க்க முடியாத ஆபத்தை சந்திக்க நேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே தான் மேம்பட்ட மைக்ரோவேவ் ஆயுதங்களை அமெரிக்காவும், சீனாவும் உருவாக்கி வருகின்றன.

ஏற்கனவே சீனா தனது ரகசிய உயர் சக்தி நுண்ணலை ஆயுதத் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக ஹரிகேன்-3000 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மைக்ரோவேவ் ஆயுதத்தை உருவாக்கியுள்ளது. இது அணு வெடிப்பின் சக்திக்கு இணையான 80,000 வோல்ட் வரை மின்காந்த துடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

மேலும், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைச் சீர்குலைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தைக் கூறும் பல ஆய்வுகளை சீனா கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் Northwest Institute of Nuclear Technology-யில் உள்ள உயர் சக்தி மைக்ரோவேவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான ஆய்வகத்தைச் சேர்ந்த சீன விஞ்ஞானி வாங் கேங் தலைமையிலான குழு இந்த புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த மைக்ரோவேவ் ஆயுதம் மின் ஆற்றலைச் சேமித்து, டெஸ்லா காயில் போன்றே, அதை ஒரே நேரத்தில் ஒரு சக்திவாய்ந்த துடிப்பாக வெளியிடுகிறது.

அவற்றால் உருவாக்கக்கூடிய பிரம்மாண்டமான மின்சக்தி எழுச்சியால் மைக்ரோவேவ் ஜெனரேட்டர்களை இயக்க முடியும். மேலும், மற்ற மின்னணு சாதனங்களைத் செயலிழக்கவைக்க முடியும்.

வடமேற்கு அணு தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள், (Midel 7131) ‘மிடெல் 7131’ எனப்படும் ஒரு சிறப்பு திரவ மின்காப்புப் பொருளைப் பயன்படுத்தி, அதிக ஆற்றல் சேமிப்பு அடர்த்தி, வலுவான மின்காப்பு மற்றும் குறைந்த ஆற்றல் இழப்பை அடைந்துள்ளனர். இது ஒட்டுமொத்தமாக மிகவும் திறமையான மற்றும் சிறிய சாதனத்தை உருவாக்க உதவியுள்ளது.

1 ஜிகாவாட்டிற்கு (GW) அதிகமான வெளியீட்டைக் கொண்ட தரை அடிப்படையிலான இந்த மைக்ரோவேவ் ஆயுதம், பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைச் செயலிழக்க வைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

60 வினாடிகளில் சுடக்கூடிய உலகின் முதல் 20 ஜிகாவாட் மைக்ரோவேவ் ஆயுதம் இது என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

TPG1000Cs என்று பெயரிடப்பட்டுள்ள சீனாவின் இந்தக் கருவி உயர் சக்தி கொண்ட மைக்ரோவேவ் ஆயுதமாகும்.

தரையிலிருந்து இயங்கக் கூடிய இந்த மைக்ரோவேவ் ஆயுத தொழில்நுட்பத்தால், பூமியின் குறைந்த சுற்றுப் பாதையில் உள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை சீர்குலைக்கவும் முற்றிலுமாக அழிக்கவும் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

வெறும் நான்கு மீட்டர் நீளமும், ஐந்து டன் எடையும் கொண்ட இந்த ஆயுதத்தை லாரிகள், போர்க்கப்பல்கள், விமானங்களிலிருந்தும் இயக்க முடியும். மேலும் செயற்கைக்கோள்களில் கூட பொருத்தக்கூடிய அளவுக்கு கன கச்சிதமாக இந்த மைக்ரோவேவ் ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 டன் எடை கொண்ட ரஷ்யாவின் Sinus-7 என்ற மைக்ரோவேவ் ஆயுதத்தை விடவும் குறைந்த எடையில் அதிக ஆற்றல் கொண்டதாக தயாரிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு அமர்வில் 3,000 உயர் ஆற்றல் துடிப்புகள் வரை இந்த ஆயுதத்தால் வழங்க முடியும்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு, சீனாவின் பாதுகாப்பு ஆராய்ச்சிக்குத் தொடர்ந்து பங்களித்து வரும் பெய்ஜிங் தொழில்நுட்பக் கழகத்தின் (BIT) விஞ்ஞானிகள், தைவான் அளவுள்ள பரப்பளவில் பரவியுள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைச் சீர்குலைப்பதற்கான ஒரு ஆயுத முறையை உருவகப்படுத்தி காட்டிஇருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Elon Musk's StarLinkweaponcontinuously warningStarlink killerchinaamericaWARusnational security
Share
Tweet
SendShare
Previous Post

ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் – அமெரிக்க வரைபடத்தால் அதிர்ந்த பாக்., – சிறப்பு தொகுப்பு

Next Post

சந்திரயான்,மங்கள்யான் வரிசையில் இஸ்ரோ வைத்த இலக்கு – வெள்ளியை ஆராயும் “வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்”

Related News

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies