சந்திரயான்,மங்கள்யான் வரிசையில் இஸ்ரோ வைத்த இலக்கு - வெள்ளியை ஆராயும் "வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்"
Sep 27, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்,மங்கள்யான் வரிசையில் இஸ்ரோ வைத்த இலக்கு – வெள்ளியை ஆராயும் “வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்”

Manikandan by Manikandan
Feb 9, 2026, 06:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூமியின் சகோதரி கோள் என்று அழைக்கப்படும் வீனஸை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக களமிறங்கியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்

சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவிலும், மங்கள்யான் திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திலும் பெயர் பொறித்த இஸ்ரோ, அடுத்ததாக வீனஸ் என்றழைக்கப்படும் வெள்ளி கிரகத்தின் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறது.

வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் என்ற பெயரில் ஆராய்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பூமிக்கு அருகில் அமைந்துள்ள கோளில், அதே போன்றதொரு சூழல் நிலவுகிறதா? என்பதை உறுதி செய்ய இத்திட்டம் வேகமெடுத்துள்ளது. வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பு, நிலத்தடி மேற்பரப்பு, வளிமண்டல செயல்பாடு மற்றும் சூரியனின் தாக்கம் ஆகியவை குறித்து இத்திட்டத்தின் வாயிலாக அறிய முடியும்.

வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்காக மொத்த ஆயிரத்து 236 கோடி ரூபாய் செலவிடப்படும் நிலையில், அதில் 824 கோடி விண்கலத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2028-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எல்விஎம் 3 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவப்படும் சுக்ராயன் 1 விண்கலம், 112 நாட்களுக்கு பிறகு வெள்ளி கிரகத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வீனஸ் S-பேண்ட் செயற்கை துளை ரேடார், வீனஸ் தெர்மல் கேமரா, வீனஸ் கிளவுட் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட கருவிகளின் தொகுப்பை கொண்டிருக்கும் சுக்ராயன் 1 விண்கலம், வளிமண்டலம், மேற்பரப்பு மற்றும் பிளாஸ்மா சூழலை ஆராய விஞ்ஞானிகளுக்கு உதவும்.
இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான நோக்கம் என்னவென்றால்… வெள்ளி கிரகத்தில் உள்ள எரிமலை செயல்பாடுகளை ஆராய்வதாகும்.

புவியை போன்றே ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் புவியின் “சகோதரிக் கோள்” என்று வீனஸ் அழைக்கப்படுகிறது. பூமியை நன்கு புரிந்துகொள்ள உதவும் பல தகவல்களை வெள்ளி கிரகம் தன்னுள் கொண்டிருப்பதாக நம்பப்படுவதாலும், சூரிய மண்டலத்தில், வாழக்கூடிய முதல் கிரகமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுவதாலும், இஸ்ரோவின் வீனஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ, வீனஸ் ஆர்ப்பிட்டர் மிஷனிலும் சாதிக்கும் போது, விண்வெளி துறையில் தன்னிகரில்லா இடத்தை உறுதி செய்யும். தற்போது ராக்கெட் ஏவுதல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோவின் ஒவ்வொரு நகர்வும் உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது

Tags: mission to study VenusEARTH SISTERISROvenusIndian Space Research OrganisationEarth's sister planet
Share
Tweet
SendShare
Previous Post

அச்சத்தில் அமெரிக்கா – சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு

Next Post

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் – முதல்வர் பேச்சு!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies