விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒருமனதாக இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.