திருச்சி மாவட்டம் லால்குடி திமுக எம்எல்ஏ சவுந்திரபாண்டியன், தான் இயற்கை எய்திவிட்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் அரசு கட்டிடத்தை ஆய்வு செய்யும் புகைப்படத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் இயற்கை எய்தியதால் அந்த தொகுதி காலியாக உள்ளது என விரக்தியோடு பதிவிட்டார்.
மேலும் திருச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடர்ந்து எம்.எல்.ஏ சவுந்திரபாண்டியனை அரசு விழாக்களில் அழைக்காமல் புறக்கணிப்பதாக கூறப்படும் நிலையில் எம்.எல்.ஏ.வின் இந்த பதிவு அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.