விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் அன்புமணி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. C. அன்புமணி அவர்கள், மயிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அண்ணன் திரு. C. சிவக்குமார் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் இன்றைய தினம் நேரில் வருகை தந்து சந்தித்ததில் மகிழ்ச்சி.
ஜூலை 10 அன்று நடைபெறவிருக்கும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்கள் முழு உழைப்பையும் வழங்கி, அண்ணன் திரு. C. அன்புமணி அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என தெரிவித்துள்ளார்.