அரசின் சிறந்த அனிமேஷன் மையம் மும்பையில் விரைவில் வரவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தொடர்பான அரசின் முன்னெடுப்புகள் குறித்து விளக்கிக் பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.