நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிடுக : அண்ணாமலை வலியுறுத்தல்!
Aug 3, 2025, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிடுக : அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jun 16, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியை கைவிட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில், மீனவ மக்கள், விவசாயிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், நகரைச் சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் பொதுமக்களும் வசித்து வருகின்றனர். நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை. சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று வந்தனர்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி அளித்ததை அடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று, ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று, நமது பிரதமர் அவர்கள், காணொளி மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட, தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்.

மருத்துவக் கல்லூரி என்பது புதிய மருத்துவர்களை உருவாக்குவதற்காக, அவர்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வசதியாக, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே அன்றி, ஏற்கனவே பொதுமக்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்பைச் சீர்குலைப்பது அல்ல. ஆனால், திமுக அரசு, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யும் முடிவில் இருந்ததை அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட பாஜகவினர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை முழுவதுமாக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றும் திட்டத்தை எதிர்த்து, அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் தொடர்ந்து செயல்பட வேண்டும், அரசு மருத்துவமனை கட்டிடங்களை, மருத்துவக் கிடங்காக மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 17 அன்று போராட்டம் நடத்தினர்.

இதனால் திமுக அரசு தொடர்ந்த வழக்குகளை சட்டரீதியாக இன்றும் நாகை பாஜகவினர் எதிர்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும், நாகை அரசு தலைமை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று தொடர் கோரிக்கைகளும், போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் 4 அன்று, ஒரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர், பொதுமக்களின் பலத்த எதிர்ப்பையும் புறக்கணித்து, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும், நாகை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முழுமையாக மாற்றப்பட்டன. இதனால், நாகை நகரைச் சுற்றியிருக்கும் பல லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரத்தூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப், போதுமான பேருந்து வசதிகளோ, சாலை வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவசரகால சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை போன்றவற்றுக்கு, 15 கிமீ தொலைவில் உள்ள ஒரத்தூர் கிராமத்திற்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வது என்பது முற்றிலும் கடினமான ஒன்று. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டபோது, தஞ்சை மையப்பகுதியில் செயல்படும் இராசா மிரசுதார் அரசு மருத்துவமனை மாற்றப்படவோ மூடப்படவோ இல்லை.

Tags: bjpTamilNadu Bjpannamalaitamilnadu bjp chiefnagai government hospital issue
ShareTweetSendShare
Previous Post

குற்றாலம் அருகே விபத்து : இரு சுற்றுலாப்பயணிகள் பலி!

Next Post

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 9 பேர் காயம்!

Related News

திமுக எம்பி, எம்எல்ஏ மோதல் சம்பவம் – ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக போஸ்டர்!

அருண் ஜெட்லி குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஆடித் திருவிழா – ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி கோலாலகலம்!

ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான், வங்க தேசம் ரகசிய ஆலோசனை – உளவுத்துறை தகவல்!

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்களை சிரிக்க வைத்த மதன் பாப் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு – நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies