அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கிவிட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவு அல்ல என தெரிவித்தார். அதிமுகவில் தற்போது ஜாதி அரசியல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய வி.கே.சசிகலா, தான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி இருக்க மாட்டேன் என்றும் கூறினார்.
அதிமுகவினர் ஒன்றிணைவதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும், அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கி விட்டதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.