பாஜக தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டாவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, தங்களின் அர்ப்பணிப்பும், தலைமையும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு தேவைப்படுகிறது எனவும், அவை விலைமதிப்பற்றவை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என டாக்டர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.