பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் 20ஆம் தேதி நடைபெறும் விழாவில் இரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மற்றும் மதுரை பெங்களூரு இடையே இரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரின் தமிழக பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கூட்டத்தொடர் பணிகள் உள்ளதால் பிரதமரின் பயண திட்டம் ஒத்தி வைக்கப்படுவாக கூறப்படுகிறது.