விமான பயணத்தின் போது வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை : டிஜி யாத்ரா சேவை அறிமுகம்!
Sep 13, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான பயணத்தின் போது வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை : டிஜி யாத்ரா சேவை அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2024, 06:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில், இனி பயண சீட்டுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக டிஜி யாத்ரா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன? அதனுடைய வசதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நமது விமான பயணத்தை சீராகவும் எளிமையாகவும் மேற்கொள்வதற்கு ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுதான் டிஜி யாத்ரா வசதி. கடந்த மே 6ம் தேதி முதல் சென்னையில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டிஜி யாத்திரை என்பது ஆவணங்கள் ஏதும் இல்லாமல் முகத்தை மட்டும் அடையாளமாக கொண்டு பயணிக்கும் வசதி. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அடையாள அட்டை , விமான நிலைய நுழைவுச் சீட்டு போன்ற காகித ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை. விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தை காட்டினால் போதும்.

இதற்காக பயணிகள் தங்கள் புகைப்படம், ஆதார் எண் மற்றும் பயணம் தொடர்பான விவரங்களை நவீன தொழில் நுட்பம் கொண்ட டிஜி யாத்ரா செயலியில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.

டிஜி யாத்ரா திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில் இந்த சேவை சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 இன் அனைத்து நுழைவு  வாயில்களிலும் கிடைக்கிறது, இந்த திட்டம் உள்நாட்டு பயணிகளுக்கு எளிமையான பயணத்தை ஏற்படுத்தி தருவதோடு இந்த சேவை போர்டிங் கேட்களில் வரிசையில் செலவழிக்கும் நேரத்தை கணிசமாகவும் குறைக்கிறது, இது ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் சிறப்பாக்குவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி பாதையை நோக்கிக் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளில் மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் டிஜி யாத்ரா திட்டம் பெரிய மைல்கல் திட்டமாக விளங்குகிறது.

 

Tags: chennai airportDigi Yatra Servicequeues for boarding tickets
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்திவைப்பு!

Next Post

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies