ரஷ்ய அதிபர் புதின் ஜூன் 19-ஆம் தேதி வியட்நாம் தலைநகர் ஹனாய் நகருக்குச் செல்லவுள்ளார்.
கம்யூனிஸ்ட் ஆளும் வியட்நாம், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. கடந்த 2 நாட்களாக ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் அமைதி மாநாட்டில் வியட்நாம் பங்கேற்கவில்லை.
அதேவேளையில், ரஷ்யாவில் கடந்த வாரம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் வியட்நாம் பிரதிநிதி பங்கேற்றார்.
இதன்மூலம் ரஷ்யாவுடன் எந்த அளவுக்கு வியட்நாம் நட்பு பாராட்டுகிறது என்பதை அறிய முடிகிறது. புதினின் இந்த 2 நாள் பயணத்தின்போது வியட்நாம் அதிபர் தோலாமை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.