ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக பயணி ஒருவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஒரு குழந்தைக்கு இந்த உணவு வழங்கப்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல டெல்லியிலிருந்து நியூயார்க் சென்றபோது ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவின் தரம் மோசமாகவும், இருக்கைகள் கிழிந்த நிலையிலும் இருந்ததாக வினீத் என்ற பயணி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது.