உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தியும், தமிழகத்தில் உள்ள வாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வாரக் கோரியும் தஞ்சாவூரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இண்டியா கூட்டணியினர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.