கப்பல் விபத்து காரணமாக சிங்கப்பூர் கடலில் கலந்த எண்ணெயை அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரின் தெற்கு கடற்கரை மாகாணமான சென்டோசா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் மீது நெதர்லாந்து படகு ஒன்று மோதியது.
இதனால், 400 டன் எடைகொண்ட எண்ணெய் டேங்கர் சேதமடைந்து, எண்ணெய் கடலில் கொட்டி கருப்பு நிறத்துக்கு மாறியது.
இதன் காரணமாக சென்டோசா துறைமுக பகுதியைச் சுற்றிலும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது எண்ணெயை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடைபெற்று வருகிறது.