ரஷ்யா இல்லாமல் எந்தவித பேச்சுவார்த்தையும் பலனளிக்காது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தில் உக்ரைன் அமைதி மாநாடு நடைபெற்றது.
அதில், உக்ரைன்- ரஷ்யா போரை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்விட்சர்லாந்து அமைதி மாநாட்டில் ரஷ்யா பங்குபெறாத நிலையில், இந்த மாநாட்டால் எந்தவித பலனும் இல்லை என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.