இலங்கையில் உள்ள பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டே பெட்ரோல் நிரப்பியபோது, அவரது இருச்சகர வாகனம் திடீரென தீ பற்றியது.
கிளிநொச்சி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அவர் செல்போனில் பேசியபடியே வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
அப்போது, யாரும் எதிர்பாரத வண்ணம் இருசக்கர வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.