விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 100 கிலோ குட்கா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்திராயிருப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வத்திராயிருப்பு – மகாராஜபுரம் சாலையில் வந்த ஆட்டோ மற்றும் பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, 85.5 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த போலீசார், குட்கா கடத்திய சுப்பிரமணி, ஹரிஹரன், திலீபன்ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல், முகமது அஸ்லம் என்பவர் பைக்கில் கடத்தி வந்த சுமார் 15.5 கிலோ குட்கா மற்றும் 4 ஆயிரத்து 500 ரூபாய் பணம், பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், முகமது அஸ்லமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.