கன்னியாகுமரியில் உள்ள பிரபல உணவகத்தில் இறைச்சி வறுவலில் பல்லி இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வளர் மகன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
மார்த்தாண்டம் பகுதியில் ஐயூப் கான் என்பவர் பதிரியா என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவருடைய உணவகத்துகு வந்த சிறப்பு உதவி ஆய்வாளரான புவநேந்திரனின் மகன் ரோகித், இறைச்சி வறுவல் வாங்கிச் சென்றுள்ளார்.
பின்னர் பார்சலை பிரித்து பார்த்த தந்தையும் மகனும் அதில் பல்லி இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ரோகித் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து உணவகத்துக்கு சென்ற அதிகாரிகள் இறைச்சியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.