திருச்சி மாவட்டம் துறையூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 5 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் தங்க நகையைத் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துறையூர் சௌடாம்பிகா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் மதுரை வீரன். இவர் வீட்டில் இல்லாதபோது, ஐந்து பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி, 5 லட்சம் ரொக்கம் மற்றும் ஐந்து சவரன் மதிப்புள்ள தங்க ருத்ராட்ச மாலை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, காரில் சென்றுள்ளனர்.
வீட்டிற்கு வந்த மதுரை வீரன், தனது உறவினர் கூறிய தகவலைக் கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நூதனமாக திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.