அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி பகுதியில் உள்ள கோர்மன் என்ற இடத்தில் கடந்த 15ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது பல பகுதிகளுக்கும் தீ பரவியதில் சுமார் 3 ஆயிரத்து 600 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்து ஆயிரத்து 200 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த வருடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.