அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பப்புவா நியூ கினியாவை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களின் முடிவில் 78 ரன்கள் மட்டுமே பெற்றது.
அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் இலக்கை அடைந்து ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.