டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 39வது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் 4 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 ஓவர்களையும் மெய்டனாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.