சென்னை மயிலாப்பூரில் உள்ள சரவணபவன் உணவகத்தின் அலுவலக அறையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
வடக்கு மாட வீதியில் அமைந்துள்ள சரவண பவன் உணவகத்தின் 3வது மாடியில் அலுவலக அறை மற்றும் ஊழியர்கள் தங்கும் அறை உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் அலுவலக அறை இன்வெட்டரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாதனங்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.