கேரளாவில் குடும்ப பிரச்சினை காரணமாக மருமகனை கண்மூடித்தனமாக மாமனார், மாமியார் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் சோலக்கரை பகுதியில் மொய்தீன் – ஷபியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுடைய மகள் ரக்பீனாவுக்கும், சுலைமானுக்கும் திருமணம் நடந்த நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கருத்துவேறுபாடு காரணமாக குழந்தையுடன் ரக்பீனா, பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி மனைவி மற்றும் குழந்தையை காண மாமனார் வீட்டுக்கு சுலைமான் வந்துள்ளார். அப்போது சுலைமானை மொய்தீன் மற்றும் ஷபியா தம்பதியினர் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.