தஞ்சை அருகே தேசிய நெஞ்சாலையில் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின.
புதுக்குடி அருகே தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் குறுக்கே திடீரென மாடு வந்ததையடுத்து, கார் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.