அமெரிக்க முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையிலான குழுவினர் தலாய் லாமாவை சந்திக்க இந்தியா வந்துள்ளனர்.
திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை சந்திப்பதற்காக ஹிமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ரா விமான நிலையத்திற்கு வந்த 6 பேர் கொண்ட அமெரிக்க குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர்களை திபெத்திய நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நான்சி பெலோசி, இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தலாய் லாமாவை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.