கடலூரில் சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால், பள்ளி மாணவிகளுக்கு வழங்க வேண்டிய லட்சக்கணக்கான நாப்கின் பாக்கெட்டுகள் கிழிந்து சேதமடைந்துள்ளன.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு புது யுகம் திட்டத்தின் கீழ் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடலூர் துணை சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் லட்சக்கணக்கான நாப்கின் பாக்கெட்டுகள் வைக்கபட்டிருந்தன.
இந்நிலையில் இவற்றை ஆரம்ப சுகாதாரத்துறையினர் எடுத்துச் சென்று பள்ளிகளுக்கு வழங்காததால், அவை எலி கடித்து வீணாக கிடக்கிறது.
இந்நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.