சிக்கிமில் சிக்கி தவிக்கும் ஆயிரத்து 200 சுற்றுலாப் பயணிகளில் 200 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்கிம் மாநிலம், லாச்சுங் பகுதியில் கடந்த 12ஆம் தேதி கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவித்தனர்.
மங்கன் மாவட்டத்தில் உள்ள லாச்சுங் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினருடன் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
லாச்சுங் பகுதியில் கடந்த இரு தினங்களான நடைபெற்ற மீட்புப் பணியில் 200 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்ட நிலையில், ஆயிரம் பேர் அந்த பகுதியில் சிக்கி தவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் சுங்தாங் வழியாக வெளியேற்றப்பட்டு மங்கன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கிருந்து காங்டாக்கிற்கு அழைத்துச் செல்ல போக்குவரத்துத் துறையால் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிக்கிமில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்து எம்.பி இந்திரா ஹாங் சுப்பா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.