டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து காணப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேசிய தலைநகர் டெல்லியில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து காணப்படுகிறது.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தொடர்ந்து தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்வதால் டெல்லியின் பல பகுதிகளில் மக்களின் நிலை மோசமாக உள்ளது.
டெல்லியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைப்போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் வழங்கும் குழாய்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கீதா காலனி, ஓக்லா உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும் நிலையில், போதியளவு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், டேங்கர் லாரிகளில் மக்கள் முண்டியடித்து கொண்டு தண்ணீர் பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.