சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
சென்னை விமான நிலையத்திற்கு கடந்த ஒரு வாரமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் விமான நிலைய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பயணிகள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானம் 6E 5149-க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையில் விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.
முதற்கட்டமாக விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தினர். சோதனை முழுமை பெற்றதும், விமானம் மீண்டும் பயன்பாட்டு பகுதிக்கு அனுப்பப்படும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.