திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு பகுதியில் வேன் விபத்துக்குள்ளானதில், 27 பேர் காயமடைந்தனர்.
புதூர் நாடு சின்னவட்டானூர் பகுதியில் இருந்து பிக்கப் வேனில் சிலர் திருப்பத்தூருக்கு வந்துள்ளனர். ஏரிக்கோடி பகுதியில் வந்தபோது, வேன் விபத்துக்குள்ளானதில், இதில் பயணம் செய்த 27 பேர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.