புதுக்கோட்டையில், பள்ளி சமையலறை கட்டடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் மாணவர்கள் பீதியடைந்தனர்.
பெரிய தம்பி உடையான்பட்டியில் கடந்த 38 ஆண்டுகளக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழையின் காரணமாக முகப்பு பகுதியில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் மற்றும் சமையலறை கட்டடத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர். பள்ளியில் போதிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.