காட்பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாகச் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
காட்பாடியில் இருந்து அருப்புமேடு மற்றும் கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் பெரிய பட்டரையில் இரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால், ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அந்த வழியாகச் சென்றுவர முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கியுள்ள நீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.