நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின முதியவர் உயிரிழந்தார்.
பெண்ணெய் சோலாடி கிராமத்தைச் சேர்ந்த சன்னன் என்பவர், இரவில் கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியதில், சன்னன் படுகாயமடைந்து மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூராய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.